என் மலர்
தமிழ்நாடு

ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி குணால் கம்ரா மனு- காரணம் இதுதான்...
- நிகழ்ச்சி ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் வகையில் பாட்டு பாடினார்.
- ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர்.
காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சுகிறார்.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.
குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்பை கர் காவல் நிலையத்தில் சிவசேனா எம்.எல்.எ. முர்ஜி படேல், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்து பரப்பியதாக புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குணால் கம்ரா முன்ஜாமின் மனுவை விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.