என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை காலத்தை முன்னிட்டு மதுரை-காச்சிகுடா சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
    X

    கோடை காலத்தை முன்னிட்டு மதுரை-காச்சிகுடா சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

    • மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07191), வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (07189), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு நாந்தேட் செல்லும் சிறப்பு ரெயில் (07190), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * காச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் சிறப்பு ரெயில் (07435), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரெயில் (07436), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * ஐதராபாத் சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில் (07601), வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07602), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×