என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கழிவு நீரில் இருந்து குடிநீர்- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
    X

    கழிவு நீரில் இருந்து குடிநீர்- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

    • பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
    • 100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    அப்போது, கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு அமைச்சர் பொன்முடி, கள் தடை நீங்குமா? என்ற கேள்விக்கு, கள்ளில் சிலவற்றை கலந்தால் அது போதைப்பொருளாக மாறிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, பதநீரை கள் ஆக்குவது சரி, போதைப்பொருள் ஆக்குவதால் தான் சிக்கல். பனை பொருள் இணையதளம், கைபேசி வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.

    பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதனிடையே, அமைச்சர் கே.என்.நேரு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.

    100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.

    Next Story
    ×