என் மலர்
தமிழ்நாடு
மாநகராட்சி, நகராட்சியுடன் பஞ்சாயத்துக்களை இணைக்க ஆட்சேபனை இருந்தால் மனு அளிக்கலாம்- அமைச்சர்
- ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றும் பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் இல்லாத நிலை ஏற்படும்.
- மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களுக்கு பிறகு தான் மாற்றப்படுகிறது.
சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேல் ஊராட்சிகள் உள்ள நிலையில் 371 பஞ்சாயத்துகள் மட்டும்தான் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. அதற்கும் ஆட்சேபனை இருந்தால் 120 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
ஏதாவது பிரச்சினை இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி கோரிக்கை வைக்கலாம். அப்போது எந்த ஊரை மாநகராட்சி, நகராட்சியுடன் சேர்க்கலாம், எந்த ஊரை சேர்க்கக்கூடாது என்ற முடிவு எடுக்கப்படும். எந்த ஊராட்சியும் நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சேர்க்க பிரச்சினை செய்வதில்லை,
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றும் பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் இல்லாத நிலை ஏற்படும். பல இடங்களில் விளைநிலங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டும் உள்ள இடங்களில் பேரூராட்சிகள் மாற்றப்படுகிறது. அதற்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களுக்கு பிறகு தான் மாற்றப்படுகிறது.
மாற்று கருத்து இருந்தால் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தால் பரிசீலித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.