என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சை பெரிய கோவில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் ராஜேந்திரன்
    X

    தஞ்சை பெரிய கோவில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் ராஜேந்திரன்

    • தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து 25 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளார்.

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, வடக்கே தாஜ்மகால் இருப்பது போல் தென் மாநிலங்களில் தஞ்சை பெரிய கோவில் பிரபலமானது. அந்த கோவில் மேம்படுத்தப்படுமா? என தஞ்சை சட்டசபை உறுப்பினர் நீலமேகம் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து 25 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளார்.

    அந்த நிதியை பயன்படுத்தி தமிழக சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து தஞ்சை பெரிய கோவிலில் மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×