என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒருநாள் கஞ்சி குடித்து ஓடுபவர்கள் மத்தியில்... விஜயை சூசகமாக தாக்கிப் பேசிய அமைச்சர் சேகர் பாபு
    X

    ஒருநாள் கஞ்சி குடித்து ஓடுபவர்கள் மத்தியில்... விஜயை சூசகமாக தாக்கிப் பேசிய அமைச்சர் சேகர் பாபு

    • ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர்.
    • உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர்.

    கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்று பேசினார். அப்போது நமது முதல்வர் ஒருநாள் குல்லா அணிந்துவிட்டு ஓடுபவர் அல்ல எனப் பேசினார்.

    தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் விஜய், ஒருநாள் முழுவதும் நோன்பு மேற்கொண்டு கலந்து கொண்டார். அப்போது தலையில் குல்லா அணிந்திருந்தார். அதனை மனதில் வைத்து சேகர் பாபு மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

    அமைச்சர் சேகர் பாபு பேசும்போது "இஸ்லாமியர் குடும்பங்களில் ஒளியேற்றி வைத்த இயக்கும் திமுக. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். ஆனால் இன்று ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர். தொப்புல்கொடி உறவாம் இஸ்லாமிய நண்பர்களின் பாதுகாவலர்தான் நம் முதல்வர். ஒருநாள் கஞ்சி குடித்து ஓடுபவர்கள் மத்தியில், இஸ்லாமியர்களில் நெஞ்சில் குடியிருப்பவர் முதல்வர்.

    உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர். உங்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதார உரிமையையும், வழிபாட்டு உரிமையை மீட்டுத்தரும் தலைவர்கள்தான் மு.க. ஸ்டாலின்.

    2026 தேர்தலில் உங்களுடைய 200 இடங்கள் என்பது நிச்சயம். 234 என்பது லட்சியமாக கொண்டு செயல்படுவோம்.

    இவ்வாறு சேகர் பாபு பேசினார்.

    Next Story
    ×