என் மலர்
தமிழ்நாடு

'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்!- மு.க.ஸ்டாலின்

- தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்தவர் ‘தமிழ்த்தாத்தா’.
- மண்ணிலும் தீயிலும் மறைந்து போக இருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்தவர் உ.வே.சா.
சென்னை:
'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும்-பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.வின் பிறந்தநாள் இன்று! மண்ணிலும் தீயிலும் மறைந்து போக இருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்!
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ளார்.
தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. அவர்களின் பிறந்தநாள் இன்று!மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த… pic.twitter.com/0B5kIe6eKY
— M.K.Stalin (@mkstalin) February 19, 2025