search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    42 மாத கால தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
    X

    42 மாத கால தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

    • விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
    • போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் சொல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றால், அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் அறிவுத் திறன் உயர்த்தப்பட வேண்டும், அரசுப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    ஆனால், இவையெல்லாம் கடந்த 42 மாத கால தி.மு.க. ஆட்சியில் நடைபெறவில்லை. மாறாக, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×