search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
    X

    பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

    • பொதுத்தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
    • பொதுத்தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தோ்வு இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த 3-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தோ்வு இன்று (புதன்கிழமை) முதல் மாா்ச் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 மையங்களில் 8 லட்சத்து 23 ஆயிரம் போ் எழுதினா். இதில் 7,557 பள்ளிகளில் இருந்து 8,18,369 மாணவ-மாணவிகள், 4,755 தனித்தோ்வா்கள் மற்றும் 137 கைதிகளும் அடங்குவா்.

    பொதுத்தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    பொதுத்தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிா்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

    இதுதவிர பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தோ்வு நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    மேலும், பள்ளிக்கல்வித்துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×