என் மலர்
தமிழ்நாடு

காளியம்மாளுக்கு வலை விரிக்கும் அரசியல் கட்சிகள்: எந்த பக்கம் செல்வார்?

- மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள்.
- காளியம்மாளின் அதிரடி பேச்சுக்கள் அரசியல் களத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். சமூக செயற்பாட்டாளராக இருந்தவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
கடந்த 6 மாதமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கனத்த இதயத்துடன் வெளியேறியதாக கூறியவர் அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை.
காளியம்மாளின் அரசியல் அதிரடி பேச்சுக்கள் அரசியல் களத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும்.
எனவே அவரை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் ஏதாவது ஒரு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் காளியம்மாளின் கருத்தை அறிவதற்காக பலரும் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.