search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று சிறப்பு ரெயில்
    X

    எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று சிறப்பு ரெயில்

    • ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இன்று மேலும் ஒரு சிறப்பு ரெயிலை அறிவித்தது.
    • இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்லும் தென் மாவட்ட பகுதி மக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே பல சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. ஆனாலும் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இன்று மேலும் ஒரு சிறப்பு ரெயிலை அறிவித்தது.

    எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இந்த ரெயில் இன்று இரவு 11.45 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், சென்ட்ரல் வழியாக கொச்சுவேலி சென்றடைகிறது. இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது.

    இந்த ரெயிலில் 3 அடுக்கு பெட்டிகள் 2-ம், இரண்டாம் படுக்கை வசதி பெட்டிகள் 2-ம், பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் 10-ம், 2-ம் வகுப்பு பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×