என் மலர்
தமிழ்நாடு

குடியரசு தினத்தில் தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் அறிவிப்பு?

- பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
- டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போட்டி.
சென்னை:
பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு இணை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
மாவட்ட தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டு 33 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 33 மாவட்ட தலைவர்களும் புதிய மாநில தலைவர் அறவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
புதிய மாநில தலைவர் வருகிற 26-ந்தேதி (ஞாயிறு) அறிவிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாநில தலைவர் பதவிக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் வருகிற 2026 தேர்தலை கருத்தில் கொண்டு வலிமையான தலைமை வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் மீண்டும் அண்ணாமலையே தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.