என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உருவாகும் தற்காலிக புயல் - வானிலை ஆய்வு மையத்தின் புது அப்டேட்
    X

    உருவாகும் தற்காலிக புயல் - வானிலை ஆய்வு மையத்தின் புது அப்டேட்

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும்.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யாமல் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிகமாக புயல் உருவாக கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாகே தமிழகத்தில் கரையை கடக்கும். தற்காலிக புயலாக மாறியபின் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். நவம்பர் 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×