என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மன்னர் ஆட்சிக்கு தமிழ்நாட்டுப் பெண்கள் முடிவு கட்டுவார்கள் - விஜய்
    X

    மன்னர் ஆட்சிக்கு தமிழ்நாட்டுப் பெண்கள் முடிவு கட்டுவார்கள் - விஜய்

    • அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது.
    • சரி பெண்களின் வாழ்க்கைத்தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியதாவது:-

    எத்தனை தடைகள் போட்டாலும் மக்களை பார்க்க நினைத்தால் போயே தீர்வேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருக்கிறேன்.

    நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆகணும் கனவு காண்கிறான். அது நடக்கவே நடக்காது என்று சொகின்றீர்கள். அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியே தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போடுகின்றீர்கள்?

    அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சுறாவளியாக மாறும், ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

    என தருமை தமிழக வெற்றிக் கழக தோழர்களே, நான் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதைத் தான் திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண், சமய நல்லிணக்கத்தை பேணும், சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும். உங்களை வேண்டிவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை கேட்கும் போது மன உளைச்சலும், மனவேதனையும் தருவதாக இருக்கிறது.

    சட்டம் ஒழுங்கு ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அதற்கு கரப்ஷன்ஸ், கபடதாரிகள் அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி. இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி? நாம் என்ன செய்யப்போறோம்?

    நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை சந்தியுங்கள், அவர்களிடம் பேசுங்கள். ஒவ்வொரு தெருவுக்கும், வீட்டுக்கும் சென்று அவர்களின் பிரச்சனை என்னவென்று கேளுங்கள். அதை தீர்க்க என்ன வழி என்று யோசியுங்கள். அப்போது தான் அவர்களுக்கு நம்ம மீது நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான விதையை விதைத்துவிட்டு அதற்கு பின் நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டைப் போர் யானை, வாகை மலர்க்கொடி தானாக பறக்கும்.

    மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே. உங்க ஆட்சியை பற்றி மட்டும் கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்சப்புள்ளங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில் வேறு உங்களை அப்பான்னு கூப்பிடுறாங்கன்னு சொல்றீங்க.

    தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களோட அரசியலுக்கே ஒரு முடிவு கட்ட போறாங்க. உங்க ஆட்சிக்கு முடிவு கட்டப்போறாங்க. உங்களோட இந்த அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போறாங்க.

    சரி பெண்களின் வாழ்க்கை தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்? பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், டங்ஸ்டன், மின்கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம். இதுஎல்லாம் சாம்பிள் தான். இந்த எல்லா போராட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கூட இருக்கும்," என்றார்.

    Next Story
    ×