என் மலர்
தமிழ்நாடு
X
அடுத்த வாரம் சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
ByMaalaimalar24 Jan 2025 11:03 AM IST
- புதிய மாநில தலைவருக்கான தேர்வும் நடந்து வருகிறது.
- தேர்தல் பார்வையாளரான மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அடுத்த வாரம் வருகிறார்.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேத்தி திருமண வரவேற்பு விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமுத்திரா அரங்கில் நடக்கிறது. இந்த திருமண விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
தமிழக பா.ஜ.க.வில் புதிய மாவட்ட தலைவர்கள் முதல் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 33 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். 20 மாவட்ட தலைவர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாநில தலைவருக்கான தேர்வும் நடந்து வருகிறது. தேர்தல் பார்வையாளரான மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அடுத்த வாரம் வருகிறார். அப்போது மாநிலத் தலைவரும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
X