search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரம்: சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
    X

    வேங்கைவயல் விவகாரம்: சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    • வழக்கு விசாரணை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • வழக்கு சரியான திசையில் செல்லவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி எவ்விதமான அறிக்கையையும் சமர்ப்பிக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில், அவசர அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது வழக்கு சரியான திசையில் செல்லவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

    எனவே, பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க ஏதுவாக, மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×