என் மலர்
தமிழ்நாடு

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
- அமித்ஷா, டி.டி.வி., சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டியும் பேசி உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஒரே பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதாகவும், போராட்டத்தில் முதற்கட்டமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் புகாரை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பின்போது பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், 2021 சட்டசபை தேர்தலில் தாம் சொன்னதை ஏற்காததால் தோல்வி அடைந்ததாகவும், 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம் என்று அமித்ஷா வருத்தப்பட்டதாகவும், தாம் கூறியதை கேட்டிருந்தால் தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்காது எனவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அமித்ஷா, டி.டி.வி., சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டியும் பேசி உள்ளார்.
தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் சிலருக்கு கடிவாளம் போட வேண்டும் என அ.தி.மு.க. கேட்டுக்கொண்டதாகவும், தி.மு.க. அமைச்சர்கள் சிலரின் சொத்து விபரத்தையும் அ.தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறை அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.