என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
உகாண்டாவில் பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி
- ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பள்ளிக்கூடத்தில் ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டது மற்றும் ஒரு உணவுக்கூடம் சூறையாடப்பட்டது. இங்கு இதுவரை 41 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.
உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.