search icon
என் மலர்tooltip icon

    ஹாங்காங்

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஏமாற்றம் அளித்தது.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- மலேசியா ஜோடியுடன்மோதியது.

    இதில் இந்திய ஜோடி 11-21, 20-22 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் கோபிசந்த்-ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- சக நாட்டு கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியை 21-9, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஜப்பான் வீராங்கனையிடமும், தன்யா ஹேமந்த் இந்தோனேசியா வீராங்கனையிடமும் தோல்வி அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும்.
    • இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக்கக் கூறி மெய்சிலிர்த்தனர்.

    சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி 'டோரிமான்' கதாபாத்திரங்கள் வானில் காட்சிப்படுத்தப்பட்டன.

    சுமார் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்ட இந்த ட்ரோன் ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். 

    இதை கண்டுகளித்த மக்கள் இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக கூறி மெய்சிலிர்த்தனர். இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும்.

    கடந்த மே மாதம் ஹாங்காங்கில் முதலாவது டோரிமான் ட்ரான் ஷோ நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • விலைவாசி உயர்வால் தம்பதியினர் குழந்தைகள் பெற்று கொள்வதை தவிர்க்கின்றனர்
    • எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $300 பில்லியன் அளவிற்கு கடன் உள்ளது

    சீனாவை சேர்ந்த மிக பெரிய கட்டுமான நிறுவனம், எவர்கிராண்டே (Evergrande).

    எவர்கிராண்டே, சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அபார்ட்மென்ட் மற்றும் வணிக வளாகங்களை பெருமளவில் கட்டி விற்பனை செய்து வந்தது.

    கடந்த சில வருடங்களாக சீனாவில் விலைவாசி அதிகரிப்பால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கான செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதாகவும், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை தள்ளி போடுவதுடன், தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.

    பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டது. இதன் தாக்கம் எவர்கிராண்டே நிறுவன வருவாயில் எதிரொலித்தது.

    கடந்த 2021ல் எவர்கிராண்டே வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $240 பில்லியன் மதிப்பிற்கு சொத்துக்களும், $300 பில்லியன் மதிப்பிற்கு கடனும் உள்ளது.

    இந்நிலையில், 2022ல், அந்நிறுவனத்தில் பெருமளவு பணம் முதலீடு செய்திருந்த டாப் ஷைன் குளோபல் எனும் நிறுவனத்தின் மனுவை விசாரித்த ஹாங்காங் நாட்டின் நீதிமன்றம், எவர்கிராண்டே நிறுவனத்தை மூடப்பட்டதாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கி, கடனை ஈடு கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

    இதை தொடர்ந்து ஹாங்காங் பங்கு சந்தையில் எவர்கிராண்டே வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டது.

    கடன் வழங்கியவர்களுக்கு நிவாரணத்திற்காக ஹாங்காங் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீன நீதிமன்றங்கள் செயல்படுத்த அனுமதிக்குமா என்பது சந்தேகம் என்றும், இத்தீர்ப்பின் தாக்கம் ஏற்கெனவே நலிவடைந்துள்ள சீன பொருளாதாரத்தில் கடுமையாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஹாங்காங் நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.2 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    ஹாங்காங்:

    இங்கிலாந்திடம் இருந்து 1997-ல் சுதந்திரம் அடைந்த ஹாங்காங் பின்னர் சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் தற்போதுவரை ஹாங்காங் தன்னாட்சி பிராந்தியமாகவே செயல்படுகிறது. இதற்கிடையே இங்குள்ள கிரிமினல் குற்றவாளிகளை சீனா, தைவான் நாடுகளுக்கு கடத்தி விசாரிக்கும்வகையில் ஒரு சட்டத்திருத்த மசோதா 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது ஹாங்காங்கை ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என கூறி ஹாங்காங் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அந்த மசோதா கைவிடப்பட்டது. எனினும் ஹாங்காங் நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்தநிலையில் அங்குள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் யாரும் இதில் வாக்களிக்கவில்லை. இதனால் வெறும் 27.5 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. இது ஹாங்காங் நிர்வாகம் மீது மக்களின் அதிருப்தியை காட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.2 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் உருவான கொய்னு புயல் கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
    • புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஹாங்காங்:

    சீனாவில் உருவான கொய்னு புயல் கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

    இந்தநிலையில் தற்போது சீனாவின் தன்னாட்சி பகுதியான ஹாங்காங் அருகே கொய்னு புயல் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    • வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒரே நாள் இரவில் 200 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சீனாவின் குவாங்டாங் கடற்கரையில் பலத்த மழை பெய்தது. ஹாங்காங்கில் மழையால் மெட்ரோ ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

    வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்த படி பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் இடைவிடாமல் கனமழை பெய்து உள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×