என் மலர்
கிரீஸ்
- சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.
- காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.
ஏதென்ஸ்:
ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது.
குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீசில் உள்ள ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல் சோர்பு மற்றும் எவியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மேலும் விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது.
இந்த நிலையில் எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கியது.
சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 2 விமானிகள் இருந்தனர். காட்டுத்தீ மீது தண்ணீரை ஊற்றி விட்டு அந்த விமானம் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.
தரையில் மோதிய விமானம் வெடித்து சிதறியதால் தீ பிழம்பு எழுந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானிகள் 2 பேர் பலியானதையடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காட்டுத்தீ காரணமாக கிரீசில் கடந்த ஒரு வாரத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் மற்றும் பிற நிலங்கள் தீயில் கருகி உள்ளன.
- தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்தது தெரியவந்தது.
- பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது.
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (வயது 55) பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, கடந்த மே 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 300 தொகுதிகளை கொண்ட கிரீஸ் நாட்டில் ஆட்சியமைக்க 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.
இதனால் அங்கு நேற்று மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பிரதமர் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 158 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மிட்சோடாகிஸ் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது.
99.70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மிட்சோடாகிசின் புதிய ஜனநாயக கட்சி 40.55% வாக்குகளை பெற்றது. சிரிசா கூட்டணி 17.84% சதவீத வாக்குகள் பெற்றது. கடந்த அரை நூற்றாண்டில் கிரீஸ் தேர்தல்களில் இதுவரை காணப்படாத மிகப்பெரிய வெற்றியாகும்.
புதிய ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி கேதரீனா ஸகேல்லாரோபவுலவ், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றார்.
தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்தது தெரியவந்தது. இதனால் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கருத்துக்கணிப்புகளை மீறி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மாபெரும் வெற்றி பெற்று மறுபடியும் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் கிரியாகோஸ் வெற்றி பெறுவார் என அங்குள்ள கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
- கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
- சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
கலாமட்டா:
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தெற்கு கிரீசில் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
- சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
கலாமட்டா:
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகின்றோம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
- அகதிகள் லிபியாவிலிருந்து புறப்பட்டு இத்தாலி நோக்கிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்த தகவலை அடுத்து, கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கடலோர காவல் படையினர் கூறுகையில், " அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று அதிகாலை முதல் விரிவான மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. கப்பலில் யாரும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உடனடியாக தெரியவில்லை.
ஆனால், இவர்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டு இத்தாலி நோக்கிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
- கிரீசில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 57 பயணிகள் பலியாகினர்.
- இந்த விபத்துக்கு அந்நாட்டு பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் ஏதென்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 350 பயணிகளுடன் ரெயில் சென்றது.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது. இந்த கோர விபத்தில் 57 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்நிலையில், கிரீஸ் ரெயில் விபத்தில் பலியானோருக்காக அந்நாட்டு பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மிஸ்டோடாகிஸ் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன். இது துயரமான மனித தவறு ஆகும் என பதிவிட்டுள்ளார்.
- இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
- ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் 2 ரெயில்கள் எப்படி வந்தது என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது.
இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கிரீஸ் ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் 2 ரெயில்கள் எப்படி வந்தது என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
- ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது.
இந்த கோர விபத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
- கான்ஸ்டண்டைன் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார்.
- கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார்.
கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார்.
இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெண்டைன் இன்று மரணமடைந்தார். வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் ஏதென்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டண்டைன் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
- ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
கிரீஸ்:
கிரீஸ் நாட்டில் வடகிழக்கு பகுதியான கிரீட் என்ற இடத்தில் இன்று அதிகாலை 1.25 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியது.
பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுனாமி பீதி ஏற்பட்டதால் கடலோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனே காலி செய்து விட்டு உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
- நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
- நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டது.
ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் உள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது.
நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் பகுதியிலும் உணரப்பட்டது.