search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் சீனியர் தலைவர் கொலை
    X

    பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் சீனியர் தலைவர் கொலை

    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    லெபனான் இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஷியா மாவட்டத்தில் உள்ள கட்டடத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன தலைவர்களை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சயத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    கொல்லப்பட்ட தலைவர் சலா அரூரி என்றும், குழுவின் ராணுவ பிரிவின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் டிரோன் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக லெபனான் நாட்டின் தேசிய நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இதற்கு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர், நாங்கள் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போரில் கவனம் செலுத்துவோம் என்றார்.

    ஆனால் அவர் நேரடியாக சலா அரூரி மரணம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

    Next Story
    ×