search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இங்கிலாந்தில் சீக்கியர்களிடம் பிளவை ஏற்படுத்த முயற்சி- காலிஸ்தான் குழுக்கள் மீது குற்றச்சாட்டு
    X

    இங்கிலாந்தில் சீக்கியர்களிடம் பிளவை ஏற்படுத்த முயற்சி- காலிஸ்தான் குழுக்கள் மீது குற்றச்சாட்டு

    • இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் காலின் ப்ரூம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலிஸ்தான் குழுக்கள், இங்கிலாந்தில் அதிகாரத்தை விரும்புகின்றன. இதனால் சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன. அவர்கள் ஒரு பெரிய பிளவை உருவாக்க விரும்புகிறார்கள். இதனால் அதிக பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது இறுதியில் அதிகார போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×