என் மலர்
மெக்சிகோ
- முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
- கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது
மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடினார். கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது
- இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
- கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மெக்சிகோவின் குவானா ஜுவாடோ மாகாணத்தில் உள்ள இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாலைவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் அங்கு வந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் ஒரு சிறுவன், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க கூட்டத்தினர் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, அந்நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த மாதம் குவானாஜு வாடோவின் சான் பார்தோ லோடி பெர்ரியாஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.
மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.
இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.
- அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதனை தொடர்ந்து அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதற்குள் 21 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சங்கிலித் தொடர் விபத்தால் நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியேறினர்.
- செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூ என்று குறிப்பிடப்படுகிறது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஔவை மொழி. நவீன காலத்தில் அது வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அந்த வகையில் 30 வயதான நாட் செடிலோ என்ற சட்டக்கல்லூரி மாணவி படிப்புக்காக வாரம் 3,380 கிமீ விமானத்தில் பயணித்து படித்து வருகிறார்.
மெக்சிகோ நாட்டில் வசிக்கும் அவர் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு வாரமும் மான்ஹாட்டனுக்கு விமானத்தில் செல்கிறார்.
தி நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, செடிலோ திங்கள்கிழமை அதிகாலை மெக்சிகோவிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவில் வகுப்புகளை முடித்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்புகிறார். நியூயார்க்கின் ஒரு பிரபல சட்டக் கல்லூரியில் தனது இறுதி செமஸ்டரை முடிக்க அவரின் இந்த பயணம் அவசியமாகிறது.
கடந்த ஆண்டு, செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு மெக்சிகோவில் சிறந்தவ வானிலை மற்றும் மலிவு வாழ்க்கைச் செலவு காரணமாக ஈர்க்கப்பட்டு அங்கு சென்றனர். ஆனால் அவர் தனது சட்டக் கல்வியை விட்டுவிட விரும்பாமல் ஒவ்வொரு வாரமும் நெடும்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஜனவரி முதல், செடிலோ 13 வாரங்களில் விமானங்கள், உணவு மற்றும் குறுகிய கால தங்கத்திற்காக 2,000 டாலர் (₹1.7 லட்சம்) செலவிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் 3,380 கிமீ பயணித்து படித்துவிட்டு அவர் வீடுதிரும்புகிறார். சோர்வு இருந்தபோதிலும், அந்த அனுபவத்தை அவர் மதிப்புக்குரியது என்று அவர் குறிப்பிடுகிறார். செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூட்டிங் என்று குறிப்பிடப்படுகிறது.
- மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாம்பியன் பட்டம் பெற்றார்.
மெக்சிகோ:
மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய எம்மா நவாரோ 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் கொலம்பிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
மெக்சிகோ:
மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என வென்ற எமிலியானா 2வது செட்டை 4-6 என இழந்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-2 என கைப்பற்றிய எமிலியானா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதுகிறார்.
- மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா தோல்வி அடைந்தார்.
மெக்சிகோ:
மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 1-6 என படோசா இழந்தார். 2வது செட்டைல் 3-5 என இருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் டாரியா அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பூட்டிய வீட்டுக்குள் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் இறந்து கிடந்தார்.
- இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95). சூப்பர்மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பிரெஞ்சு கனெக்சன் உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அதன்பின் 1970-களின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இதையடுத்து, நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவி பெட்ஸி அரகாவா (63) உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜீன் ஜேக்மேன் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜீன், அவரது மனைவி அரகாவா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களின் செல்லப் பிராணியான நாயும் செத்துக் கிடந்தது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
- தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.
தெற்கு மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கான்கன் மற்றும் டபாஸ்கோ இடையே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக டபாஸ்கோ அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தாக தெரிவித்தனர்.
தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக டபாஸ்கோ மேயர் ஓவிடியோ பெரால்டா கூறினார்.
- மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
- கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியது. தேசிய காவல்படை மற்றும் ராணுவ லாரிகள் டெக்சாஸின் சியுடாட் ஜுவரஸ் மற்றும் எல் பாசோ இடையேயான பகுதியில் ரோந்து சென்றன.
சியுடாட் ஜுவாரெஸ் அருகே எல்லையில் முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய தேசிய காவல்படை துருப்புக்கள், தற்காலிக ஏணிகள் மற்றும் கயிறுகளை அகழிகளில் இருந்து அகற்றி லாரிகளில் ஏற்றினர். டிஜுவானாவுக்கு அருகிலுள்ள பிற எல்லைப் பகுதிகளிலும் ரோந்துகள் காணப்பட்டன.
அமெரிக்க அதிபர் மெக்சிகோ மீது கடுமையான வரி விதிப்பை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தாமதப்படுத்த முடிவு செய்ததை அடுத்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஃபெண்டானில் கடத்தலை எதிர்த்துப் போராடவும் தேசிய காவல் படையை பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இடம்பெயர்வு மற்றும் ஃபெண்டானில் ஓவர்டோஸ் குறிப்பிடத்தக்க சரிவை கண்டபோதிலும் அதிபர் டிரம்ப் எல்லை பகுதியில் அவசரநிலையை அறிவித்தார். இதற்கு பதிலடியாக, கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.
- அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
- மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.
காம்போ சடங்கு
இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
மார்செலாவுக்கு என்ன ஆனது?
சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.
மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.