search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    எல்லையில் 10 ஆயிரம் துருப்புகளை குவித்தது - சொன்னதை செய்த மெக்சிகோ
    X

    எல்லையில் 10 ஆயிரம் துருப்புகளை குவித்தது - சொன்னதை செய்த மெக்சிகோ

    • மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
    • கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது.

    மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.

    இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியது. தேசிய காவல்படை மற்றும் ராணுவ லாரிகள் டெக்சாஸின் சியுடாட் ஜுவரஸ் மற்றும் எல் பாசோ இடையேயான பகுதியில் ரோந்து சென்றன.

    சியுடாட் ஜுவாரெஸ் அருகே எல்லையில் முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய தேசிய காவல்படை துருப்புக்கள், தற்காலிக ஏணிகள் மற்றும் கயிறுகளை அகழிகளில் இருந்து அகற்றி லாரிகளில் ஏற்றினர். டிஜுவானாவுக்கு அருகிலுள்ள பிற எல்லைப் பகுதிகளிலும் ரோந்துகள் காணப்பட்டன.

    அமெரிக்க அதிபர் மெக்சிகோ மீது கடுமையான வரி விதிப்பை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தாமதப்படுத்த முடிவு செய்ததை அடுத்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஃபெண்டானில் கடத்தலை எதிர்த்துப் போராடவும் தேசிய காவல் படையை பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இடம்பெயர்வு மற்றும் ஃபெண்டானில் ஓவர்டோஸ் குறிப்பிடத்தக்க சரிவை கண்டபோதிலும் அதிபர் டிரம்ப் எல்லை பகுதியில் அவசரநிலையை அறிவித்தார். இதற்கு பதிலடியாக, கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.

    Next Story
    ×