search icon
என் மலர்tooltip icon

    சோமாலியா

    • மொகடிசுவில் உள்ள ஓட்டலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர்.
    • அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

    மொகடிசு:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் பணிகளில் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது.

    ஆனாலும், இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல ஓட்டலுக்குள் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் சிலரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர்.

    தொடர்ந்து, தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

    இந்தக் கொடூர தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் அதிரடியாக செயல்பட்டு பிணைக்கைதிகளை மீட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

    • மொகடிஷு ஓட்டலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

    ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

    வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டாக்கா:

    சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

    கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

    இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.


    அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    • சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

    இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    மேலும், இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
    • தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    பெலிட்வி:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த லாரியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.

    பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் லாரியில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க செய்து இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர்,

    இந்த தற்கொலை படை தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் 5 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்று பலர் விமர்சனம் செய்தனர்.
    • சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    சீனாவில் சமீபத்தில் கோடைகால சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற சோமாலிய வீராங்கனை மிகவும் மந்தமாக ஓடி கடைசியாக வந்து இலக்கை தொட்டார்.

    கடைசியாக வந்த வீராங்கனையின் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானது. அந்த வீராங்கனை சரியாக பயிற்சி பெறாததுபோல் தோன்றியது. வீடியோவைப் பார்த்த பலரும் சோமாலியாவின் தடகள அமைப்பை கேலி செய்யத் தொடங்கினர். இந்த புதிய ஓட்டப்பந்தய வீராங்கனையை சீனாவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பியதன் பின்னணி குறித்து பல பயனர்கள் கேள்வி எழுப்பினர். அந்த வீராங்கனை தடகள போட்டியின் வரலாற்றில் மிக மெதுவாக ஓடியதற்கான சாதனையை படைத்துள்ளார் என்றும், சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்றும் விமர்சனம் செய்தனர்.

    இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த எல்ஹாம் கராட் என்ற பயனர், சோமாலிய அதிகாரிகளை வாரிசு ஆதிக்கம் என்று குற்றம் சாட்டினார். "அது சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இது வாரிசு ஆதிக்கம். சோமாலியாவில் எங்களிடம் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர், ஆனால் பணம் என்று வரும்போது அது வேறு கதை" என்று ட்வீட் செய்தார்.

    இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோமாலி தடகள கூட்டமைப்பின் தலைவர் காதிஜோ அடன் தாஹிரை சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்திருப்பதாக அறிவித்தது.

    • மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது வெடித்தது.
    • கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தகவல்.

    தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர்.

    அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இந்த கோர சம்பவத்தில் பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 27 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.

    • எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
    • 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

    இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    • ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
    • வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும்.

    ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றாலும் தற்சமயம் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • சோமாலியா இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.
    • இந்த தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்

    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பபைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு தலைமை அலுவலகம் அருகில் அடுத்தடுத்து இரு கார் வெடி குண்டுகள் வெடித்தன.
    • கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பபைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
    • ஓட்டல் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல்.

    கிஸ்மாயு:

    சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான கிஸ்மாயுவில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.மேலும் அந்த ஓட்டலின் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்தனர். சோமாலியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

    இது குறித்த தகவல் அறிந்து, அங்கு விரைந்த சோமாலியா பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான பொதுமக்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    ×