என் மலர்
உலகம்

ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் இணைப்பு- உக்ரைனின் கிவி நகரை தாக்க திட்டம்
- ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
- ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.
கிவி:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகள் கூறும்போது, ரஷியாவை எதிர்க்க தேவையான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறோம்.
இனி வரும் நாட்களில் எங்கள் தாக்குதல் உக்கிரமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள ரஷியா, கூடுதல் வீரர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறது. அதன்படி இப்போது வரை 2 லட்சம் வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் மூலம் கிவி நகரை தாக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story