என் மலர்
உலகம்

சோசியல் மீடியாவில் தொடர்பு... முதியவரை குத்திக்கொன்ற 8 சிறுமிகள்
- கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சிறுமிகள் 13 மற்றும் 16 வயதினரே ஆவர்.
- 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.
கொலை செய்த சிறுமிகளுக்கும் இறந்த முதியவருக்கும் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
டொரன்டோ ரெயில் நிலையம் அருகே முதியவரும், சிறுமிகளும் சந்தித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி இறுதியில் சிறுமிகள் ஆத்திரத்தில் கத்தியால் அந்த 59 வயது முதியவரை குத்திக்கொலை செய்துள்ளனர்.
கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சிறுமிகள் 13 மற்றும் 16 வயதினரே ஆவர். 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story