என் மலர்
உலகம்
பாகிஸ்தானில் பலத்த மழை: 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது
- தனிஷ், பெர்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் குடிநீர், மின் விநியோகம் இல்லாமல் சிரமப்பட்டனர்.
- மழைக்கு ஒருவர் இறந்து விட்டார்.
கராச்சி:
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சித்ரல் மற்றும் பெஷாவர் பகுதியில் மழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது.
இதனால் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பர் கோஷிஸ்தான் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின் நிலையத்தை வெள்ளம் அடித்து சென்றது.
இது பற்றி அறிந்த மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
தனிஷ், பெர்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் குடிநீர், மின் விநியோகம் இல்லாமல் சிரமப்பட்டனர். இந்த மழைக்கு ஒருவர் இறந்து விட்டார்.
ஈரான் நாட்டிலும் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தெற்கு ஈரான் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காரோகார் என்ற இடத்தில் 55 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர்.
6 பேரை காணவில்லை. பல கிராமங்கள் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த மழைக்கு இதுவரை 21 பேர் பலியாகி விட்டனர்.