என் மலர்tooltip icon

    உலகம்

    போதை ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்: உக்ரைனுக்கு அனுப்பி வைப்பு- ஏன் தெரியுமா?
    X

    போதை ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்: உக்ரைனுக்கு அனுப்பி வைப்பு- ஏன் தெரியுமா?

    • ஐரோப்பாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் மோசமான விகிதங்களில் லாட்வியா உள்ளது.
    • பிப்ரவரி முதல் மே 2022 வரை, உக்ரைனுக்கு 900 வாகனங்களுக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளதாக குழு கூறியுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியாவில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் ராணுவ மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அந்நாட்டு அரசு நன்கொடையாக அனுப்பி வைக்கிறது.

    லாட்வியா நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது நூற்றுக்கணக்கான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த 2 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரத்திற்கு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த கார்கள், உக்ரைனில் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.

    இந்த கார்களை உக்ரைனின் பேரழிவிற்குள்ளான நகரங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளுக்கு வழங்குவதற்காக எட்டு வாகனங்களும் அஜெண்டம் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. பிப்ரவரி முதல் மே 2022 வரை, உக்ரைனுக்கு 900 வாகனங்களுக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளதாக குழு கூறியுள்ளது. இப்போது மொத்தம் 1,200 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    ஐரோப்பாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் மோசமான விகிதங்களில் லாட்வியா உள்ளது. ஆண்டுக்கு 3,500 வழக்குகள் பதிவாகுவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×