search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்
    X

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் தலைமையில் மனு அளித்த காட்சி.

    புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் பஞ்சாயத்தார் மனு
    • புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், புதுநகர் அங்கன் வாடியை சொந்த இடத்தில் கட்டவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை கிராம பஞ்சாயத்து மக்கள் முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் தலைமையில் அமைச்சர் தேனீ.ஜெயக் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கணுவாப்பேட்டை கிராம பஞ்சாயத்தில் சாலை வசதி, கழிப்பிட வசதி, சுடுகாடு சுற்றுச்சுவர், 100 நாள் வேலை மூலம் ஆற்றங் கரை மேம்பாடு, தெரு விளக்கு, அடிப்படை வசதிகள் என தொகுதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் கணுவாப் பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்த நிலை யில் உள்ளது.

    அதன் கொள்ளளவு குறைவாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. எனவே அதிக கொள்ள ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், புதுநகர் அங்கன் வாடியை சொந்த இடத்தில் கட்டவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    அங்காளம்மன் கோவில் எதிரே உள்ள குடிநீர் கீழ் நிலை நீர்தேக்க தொட்டியை சுற்றிலும் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும். சுத்திரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துத்தர வேண்டும். திருக்காஞ்சி மெயின்ரோட்டில் இருந்து புதுநகர் 3-வது பிளாட்டுக்கு செல்ல இணைப்பு சாலை வசதி செய்துதர தனியார் இடத்தை கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்து சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்:-

    இந்த சந்திப்பின்போது சந்திரகாசன், பெருமாள், தங்கராசு, சந்திரதரன், சுரேஷ், அரிகிருஷ்ணன், மோகன்தாஸ், சொக்க லிங்கம், பாலகிருஷ்ணன், பாபு, உமாபதி, வக்கீல் கார்த்திக், சீனிவாசன், நாகப்பன், வேணுகோபால், திருவேங்கடம், குமார், வைத்தியநாதன், அர்னால்டு முருகன், சல்வம், மணி, தணிகாசலம், வேலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×