என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பராமரிப்பின்றி கிடக்கும் மூலிகை பயிற்சி மையம்
- பள்ளி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து மூலிகைச் செடிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
- போதிய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு பகுதியில் மூலிகை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பல்வேறு விதமான மூலிகைச் செடிகள் மற்றும் அழகுச் செடிகளும் பராம ரிக்கப்பட்டு வந்தன.
இந்த மூலிகை தோட்டத்தை பார்ப்ப தற்காக புதுவை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து மூலிகைச் செடிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
மேலும் விடுமுறை காலங்களில் இப்பகுதிக்கு வந்து அழகிய செடிகளையும் மூலிகைச் செடிகளையும் பார்த்து ரசித்தனர்.
மூலிகைச் செடிகளின் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். ஆனால் தற்பொழுது இந்த மூலிகை தோட்டத்தில் செடிகள் அனைத்தும் பராமரிப்பின்றி அழிந்து விட்டன.
மூலிகை செடிகள் இருந்த இடத்தில் கோடிகள் மற்றும் முட்புதர்கள் அதிக அளவில் முளைத்துள்ளன. இங்கு போதிய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கு பணியாற்றும் ஒரு சில ஊழியர்கள் பணியை சரியாக செய்யாமல் இங்கு வந்து ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மாணவ மாணவிகள் தங்கள் பாரம்பரிய மூலிகை வைத்தியங்களை பற்றி அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் அதிகாரிகளும் சரிவர பணிக்கு வருவது கிடையாது என்று தெரிய வருகிறது. இங்கு போதுமான ஆட்களை நியமித்து மூலிகைச் செடிகளை புதிதாக நட்டு பராமரிப்பு பணியை மேற்கொண்டால் இப்பகுதியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மூலிகைச் செடிகளின் மருத்துவ பயன்களை அறிவதற்கு உறுதுணையாக இருக்கும்.
இங்கு சரிவர பணியாற்றாத பணியா ளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, புதிய பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.