search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிவலிங்கம், இந்திய வரைபடம் வடிவில் நெற்பயிர் சாகுபடி- விவசாயியின் புதுமையான முயற்சி
    X

    சிவலிங்கம் மற்றும் இந்திய வரைபட வடிவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்.

    சிவலிங்கம், இந்திய வரைபடம் வடிவில் நெற்பயிர் சாகுபடி- விவசாயியின் புதுமையான முயற்சி

    • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
    • 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.

    விவசாயியான பாஸ்கர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

    மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    Next Story
    ×