என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- திருபுவணை அருகே டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அப்போது ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருபுவனை அருகே கலிதீர்த்தாள் குப்பம்-திருக்கனூர் ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.
இதைதொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மதகடிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42) என்பதும் இவர் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு களை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜவேலுவை போலீசார கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.820 ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.