என் மலர்
புதுச்சேரி

எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க. தொகுதி செயலாளர் நடேசன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.
எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மரியாதை
- பாகூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் பாகூர் மூலநாதர் சிவன் கோவில் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
- இதில் தொகுதி தலைவர் கண்ணன், மாநில வக்கீல்கள் பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் பாகூர் மூலநாதர் சிவன் கோவில் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நடேசன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தொகுதி தலைவர் கண்ணன், மாநில வக்கீல்கள் பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி நிர்வாகிகள் குணசேகரன், உமாநாத், சிவகுமார், திருவேங்கடம், மாரிமுத்து, ராமச்சந்திரன், காசிநாதன், மாசிலாமணி, ஜெகதீசன், செல்வம், அனந்தராமன், வேலாயுதம், அன்பரசன், குருமூர்த்தி, பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜராஜன் நன்றி கூறினார்.