என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி இதுவரை நடந்த கொலைகள்...
- புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்.
- கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.
புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். இதுவே பழிக்குப்பழியாக மாறி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்கதையாகி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் வீரப்பன், தொழில் அதிபர் வேலழகன், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் ஆகியோர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதே பாணியில் 2019-ம் ஆண்டில் வாணரப்பேட்டை ரவுடி சாணிக்குமார், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் அன்பு ரஜினி ஆகியோரும் 2021-ம் ஆண்டில் முதலியார்பேட்டை பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியும், கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.