என் மலர்
புதுச்சேரி
பொது சேவை மையம் மூலம் பதிவு செய்து ரூ.1000 உதவி தொகை
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் பங்கஜ்குமார்ஜா, இயக்குனர் முத்துமீனா ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த திட்டத்தின் விண்ணப்பத்துடன் ரேஷன்கார்டு, ஆதார், போட்டோ உட்பட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை துறைரீதியில் பதிவு செய்ய பல மாதமாகும். இந்த திட்டத்தை விரைவுபடுத்த அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ. க்கள் நாஜிம், கல்யாண சுந்தரம், நாக தியாகராஜன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் பங்கஜ்குமார்ஜா, இயக்குனர் முத்துமீனா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒரு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவே அரை மணிநேரம் தேவைப்படுகிறது. தேவையற்ற விதிமுறைகளை வகுத்து திட்டத்தை தாமதப்படுத்து கின்றனர் என எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது துறை இயக்குனர் முத்துமீனா, துறையில் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அவுட்சோர்சிங் மூலமாகவோ, தேசிய தகவல் மையம் அல்லது, பொது சேவை மையங்கள் மூலமாகவோ 70 ஆயிரம் விண்ணப்ப ஆவணங்களை பதிவேற்றம் செய்து பயனாளிகளுக்கான அடையாள அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.