என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![ஏனாமில் கவர்னர் தமிழிசை வரவேற்பில் மோதல் ஏனாமில் கவர்னர் தமிழிசை வரவேற்பில் மோதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/19/1732171-pondicherry.jpg)
X
ஏனாமில் கவர்னர் தமிழிசை வரவேற்பில் மோதல்
By
Suresh K Jangir19 July 2022 3:25 PM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- யார் முதலில் செல்வது என்பதில் இரு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
- ½ மணி நேரமாக இந்த மோதல் நீடித்த நிலையில், போலீஸ் அணிவகுப்புக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில பிராந்தியமான ஏனாமில் கோதாவரி ஆற்று வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
இதை பார்வையிட கவர்னர் தமிழிசை ஏனாம் சென்றர். அவரை வரவேற்பதில் இரு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஒரு கோஷ்டியும், தற்போதைய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி அசோக் தலைமையில் ஒரு கோஷ்டியும் கவர்னரை வரவேற்க காத்திருந்தனர்.
யார் முதலில் செல்வது என்பதில் இரு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ½ மணி நேரமாக இந்த மோதல் நீடித்த நிலையில், போலீஸ் அணிவகுப்புக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X