என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கவர்னர் தமிழிசையுடன் ஆலோசனை இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கவர்னர் தமிழிசையுடன் ஆலோசனை](https://media.maalaimalar.com/h-upload/2022/07/30/1738262-pdy.jpg)
X
விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கவர்னர் தமிழிசையுடன் ஆலோசனை நடத்திய காட்சி.
இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கவர்னர் தமிழிசையுடன் ஆலோசனை
By
Suresh K Jangir30 July 2022 1:48 PM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அவர் பேசினார்.
- தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பெங்களூரு இந்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை இன்று புதுவைக்கு வந்தார்.
கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அவர் பேசினார். பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் 75 மாணவர் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது.
அதில் புதுவை சார்பில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கவர்னர், விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், விஞ்ஞானி கோகுல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
Next Story
×
X