என் மலர்
புதுச்சேரி
X
புதுச்சேரியில் லியோ திரைப்படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு சிறப்பு அனுமதி
ByMaalaimalar17 Oct 2023 1:31 PM IST
- நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.
- ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.
நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாகிறது.
லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.
இதுமட்டுமின்றி ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X