என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவர்களுக்கு தார் பாய்
    X

    மீனவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தார் பாய் வழங்கிய காட்சி.

    மீனவர்களுக்கு தார் பாய்

    • வீடுகளை பாதுகாத்து கொள்ள தார் பாய் வழங்க வேண்டும்
    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டனிடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    மாண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பாதுகாத்து கொள்ள தார் பாய் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டனிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தார் பாய்களை வையாபுரி மணிகண்டன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு மாநில நிர்வாகிகள் உதயசூரியன், ஆறுமுகம், கமல், மணிகண்டன், பெயிண்டர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×