என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
காண்டிராக்டர் மயங்கி விழுந்து சாவு
- வில்லியனூரில் கட்டிட காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- ஒரு மாதமாக கவுரி பெங்களூரில் வசிக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் கட்டிட காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது65). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு கவுரி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி விட்டது. கார்த்திகேயனும் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார்.
செல்வராஜ் தனது மனைவி கவுரியுடன் வீட்டின் கீழ்தளத்திலும், வீட்டின் மாடியில் கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜூக்கு இருத நோய் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஒரு மாதமாக கவுரி பெங்களூரில் வசிக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார். செல்வராஜிக்கு அவரது மகன் கார்த்திகேயன் உணவு கொடுத்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் செல்வராஜ் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்றார். கார்த்திகேயன் தந்தையை பார்க்க சென்ற போது அங்கு செல்வராஜ் நெற்றியில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தனது உறவினர்கள் உதவியுடன் தந்தையை சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் நெஞ்சுவலியால் செல்வராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.