உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதில் உலக கோப்பை வரலாற்றில் 40 பந்துகளில் சதமடித்து, அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.