என் மலர்
நீங்கள் தேடியது "அடை"
- அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
- வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.
பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
* கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.
* பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.
* காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)
* கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.
* ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.
* அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.
* கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.
- சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை.
- எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு அடை செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள் :
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி - தலா கால் கிலோ
தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு- 4 டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 10 பல்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக் கீரையை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரை மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
4 மணிநேரம் கழித்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அரைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!
பலன்கள்:
கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு சுவையான உணவு.
- சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த உணவு சிறந்தது.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
தக்காளி - 1
கேரட் - 1
சின்ன வெங்காயம் தோலுரித்து - 10
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 4 பல்
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் நன்றாக பொடி செய்தது,
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
ஓமம் - 1/2 ஸ்பூன் இடித்தது
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை
தக்காளி, கேரட், சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பூண்டை துருவிக்கொள்ளவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை பொடித்துகொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, அரைத்த விழுது, துருவிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ப.மிளகாய், இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம், மிளகாய் தூள், ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடை மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.
அடை மாவு பதம் தெரியாதவர்கள் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை மொத்தமாக ஊற்றி கடலை மாவைக் கரைத்தால், கட்டி கட்டியாக ஆகிவிடும். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, உங்கள் கைகளை போட்டு நன்றாக பிசைந்து அடை மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
5 நிமிடம் மாவை ஊறவைத்து விட்டு, அதன் பின்பு, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான அடை தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
- கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.
- மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக பயன்படுகிறது.
- சுரைக்காயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் விரைவில் குணமடையும்.
தேவையான பொருள்கள்
இட்லி அரிசி - 200 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சுரைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் வத்தல் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
சுரைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.
இப்போது சுவையான அடை ரெடி.
தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம்.