என் மலர்
நீங்கள் தேடியது "அமைந்தகரை"
போரூர்:
அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை ரெயில்வே காலனி 1-வது தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஞானவேல்.
இவரது டீக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை வந்த 2 பேர் நாங்கள் போலீஸ் என்று கூறினர். இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.40ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஞானவேலை மிரட்டினர்.
சந்தேகமடைந்த கடை ஊழியர் பாண்டியன் உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய இருவரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ் என்கிற கல்லறை சதீஷ் (29) சூளைமேட்டைச் சேர்ந்த மதிவாணன் (33) என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பணம் வசூல் செய்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கல்லறை சதீஷ் மீது திருவேற்காடு, பூந்தமல்லி, கே.கே.நகர், அமைந்தகரை, குன்றத்தூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
போரூர்:
அமைந்தகரை அரும்பாக்கம் டி.பி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்தநிலையில் அமைந்தகரையில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராவணன், அமைந்தகரையைச் சேர்ந்த கருணாகரன், ராஜேஷ், டி.பி சத்திரம் ரகு குமார் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் புளியந்தோப்பு பகுதியில் இருந்து கஞ்சாபொருட்களை வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை அமைந்தகரை கக்கன் நகரைச் சேர்ந்தவர் அன்சார். இவர், தனது தந்தை அன்வர் பாஷா, தனது சகோதரர் பரோசின் ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அன்சாரின் மகன் தயான் (வயது 8), பரோசின் மகள் முஸ்கான் (4½).
இவர்களது வீட்டின் முன்பக்க சுவரையொட்டி பெரிய மரம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் நல்ல மழை பெய்ததால், வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்தது.
நேற்று மாலை தயான், அவருடைய தங்கை முஸ்கான் இருவரும் வீட்டின் முன்புறம் இருந்த மரத்தின் அருகில் தங்களது தாத்தா அன்வர் பாஷாவுடன் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தால் மரம் அங்கும், இங்குமாக வேகமாக அசைந்தது. இதனால் ஏற்கனவே மழையில் ஊறி இருந்த வீட்டின் முன்பக்க சுவர், திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தயான், அவனுடைய தங்கை முஸ்கான் இருவர் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews