என் மலர்
முகப்பு » இயங்குதளம்
நீங்கள் தேடியது "இயங்குதளம்"
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் புதிய வாட்ச், ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் மென்பொருள்களான ஐ.ஓ.எஸ்., வாட்ச் ஓ.எஸ். உள்ளிட்டவற்றின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. #appleEvent2018
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 நிகழ்வு ஆப்பிள் வாட்ச், புதிய ஐபோன் மாடல்களைத் தொடர்ந்து ஐ.ஓ.எஸ். 12, ஹோம்பாட் மற்றும் டி.வி. ஓ.எஸ். 12, வாட்ச் ஓ.எஸ்., மேக் ஓ.எஸ். மோஜேவ் உள்ளிட்டவற்றின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக புதிய இயங்குதளங்கள் ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதளங்கள் செப்டம்பர் 17-ம் தேதி முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேக் ஓ.எஸ். மோஜேவ் வெளியீடு செப்டம்பர் 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். 12, தவிர ஹோம் பாட், டி.வி.ஓ.எஸ். 12 அட்மாஸ் மற்றும் வாட்ச் ஓ.எஸ். 5 அப்டேட் செப்டம்பர் 17-ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் ஓவர்-தி-ஏர் முறையில் கிடைக்கும் என்றும் பயனர்கள் இதனை இலசமாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்தது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.
புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.
டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது.
ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் ஆக்டிவிட்டி ஷேரிங், ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன், யோகா மற்றும் ஹைக்கிங், வாக்கி டாக்கி, பாட்கேஸ்ட், மேம்படுத்தப்பட்ட சிரி, ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன் போன்ற அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.
×
X