என் மலர்
நீங்கள் தேடியது "கவர்ச்சி"
- என்னோடு அரை நிர்வாணமாக நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்.
- ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
பிரபல இந்தி நடிகையான திரிப்தி டிம்ரி 'அனிமல்' படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். அனிமல் படம் ஆணாதிக்க சிந்தனையுள்ள படம் என்றும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த படத்தில் திரிப்தி டிம்ரி நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் 'அனிமல், பேட் நியூஸ்' போன்ற படங்களில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் நடித்துள்ள உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.
இதனால் காட்டமான திரிப்தி டிம்ரி ரசிகருக்கு பதில் அளித்து கூறும்போது, ''நான் இதுமாதிரி நடித்தேன் என்பது சரி. ஆனால் என்னோடு அரை நிர்வாணமாக உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
ஆபாச காட்சிகளில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எடை போடுவீர்கள். ஒருவரை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி.
- தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. திவ்யாபாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.
- அட்லீ இயக்கிய ஜவான் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன்தாரா.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "சமூகத்தில் பெண்கள் மீது உள்ள பல கட்டுப்பாடுகளை உடைத்து வருவது மிகப்பெரிய விஷயம். அதை செய்பவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதையும் தாண்டி குரல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் சேர்த்தே தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருப்பு உடை புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
- இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
- இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.
அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்வை விவாகரத்து செய்தார்.அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் டான்ஸ் ஆடினார்.அதன்பின் 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.