என் மலர்
நீங்கள் தேடியது "காலாப்பட்டு"
சேதராப்பட்டு:
புதுவை பாராளுமன்ற மற்றும் தட்டாஞ்சாவடி சட்ட சபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட் களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுவை மாநில எல்லையான காலாப்பட்டு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரின் உள்ளே அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.
இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (வயது 45) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு ஜவுளிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் இவைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வணிக வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019