search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான் ராக்கெட்"

    ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று விண்ணில் செலுத்திய 10 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது. #Japan #MOMO2 #Rocket
    டோக்கியோ:

    ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறது. தகாபுமி ஹோரி அதன் நிறுவனர் ஆவார்.

    இந்த தனியார் நிறுவனம் முதன் முறையாக ‘மொமொ -2’ என்ற ராக்கெட்டை தயாரித்தது. அதை நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் விண்ணில் செலுத்தியது.

    கொகைடோ தீவில் உள்ள தைகி சோதனை தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. உடனே தீப் பிழம்பை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட் சில வினாடிகளில் வெடித்து சிதறியது.

    வெடித்த ராக்கெட் 10 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிறுவனம் ஒரு ராக்கெட் அனுப்பியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

    அப்போது ஏவப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினீயர்கள் ராக்கெட்டின் கட்டுப்பாட்டை இழந்து விட்டனர். தற்போது 2-வது தடவையாக ஏற்பட்ட தோல்வியால் இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதைப்பற்றி இந்த நிறுவனம் கவலைப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட தோல்வியை ஆய்வின் மூலம் சரி செய்து மீண்டும் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்துள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹோரி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.  #Japan #MOMO2 #Rocket

    Courtesy - Global News
    ×