என் மலர்
நீங்கள் தேடியது "ஜெய்ப்பூர்"
- 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கி பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து பத்து வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெட்ரோல் பங்கில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது.
ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து அரங்கேறிய சம்பவ இடத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக தீ விபத்தில் காயமுற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்.
தீ விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நான் எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக தேவையான மருத்துவத்தை வழங்குமாறு அங்குள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டேன். வசதிகள் மற்றும் காயமுற்றவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.
- வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
- கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் அனுஜ். அவர் ஆகஸ்ட் 18-ந்தேதி அன்று தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் மலைக்கு சென்று இருந்தார். அந்த இடத்தில் அனுஜ்ஜை கண்காணித்த சிலர் அவரது உடையை பார்த்து, அவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று கருதி, அவரை கடத்த முடிவு செய்தனர்.
அவரை அணுகி வாயில் டேப் ஒட்டி, கை, கால்களை கட்டி, கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்கள் அவரை காரில் அழைத்துச் சென்றனர். அவரது நண்பரை தாக்கி வழியிலேயே இறக்கி விட்டனர்.
வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு, போலீசார் அவரது நண்பர் சோனியை விசாரித்து, ட்ரோன்களை பயன்படுத்தி நஹர்கர் மலைகளில் சோதனை செய்தனர்.
இதற்கிடையில், அனுஜின் பெற்றோருக்கு கடத்தல்காரர்களிடமிருந்து போன் வந்தது. அவர்களது மகனை விடுவிப்பதற்காக அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கேட்டனர்.
அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், பணம் திரட்ட அனுஜ் பெற்றோர் அவகாசம் கேட்டனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து அனுஜ் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடத்தல்காரர்களின் போன் கண்காணிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது.
ஒரு நாள் கடத்தல்காரர்கள் மீண்டும் அனுஜ் குடும்பத்தை அழைத்து பணத்தை கொண்டு வந்து கல்கா-சிம்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பெட்டியில் உட்காருமாறு அறிவுறுத்தினர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன. தரம்பூர் ரெயில் நிலையம் அருகே பணப்பையை வீசி எறியுமாறு கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, அங்கு காத்திருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டவர் வீரேந்திர சிங் என்ற மென்பொருள் பொறியாளர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடிவருகின்றனர்.
இறுதியாக ஜெய்ப்பூர் காவல்துறையினரால் ஆகஸ்ட் 27-ந்தேதி அனுஜ் மீட்கப்பட்டார். அவர் ஒரு ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீசார் அவரை மீட்டனர்.
அனுஜ் எழுந்திரு... எழுந்திரு... ஜெய்ப்பூர் போலீஸ் என்று கூறுகின்றனர்.
அனுஜ் ஹாய்... ஹலோ... என்று கை அசைக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அனுஜ் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை மீட்க தாங்கள் இருப்பதாகவும் போலீசார் அவரை எழுப்புவதையும் காணலாம்.
'हैलो बेटा..जयपुर पुलिस'?ये लड़का जो कंबल हटा के उठा है उसका जयपुर से अपहरण हुआ है, राजस्थान पुलिस ने हिमाचल के सोलन से एक होटल में उसे इस अंदाज में सरप्राइज किया. #Jaipur #Rajshthan #HimachalPradesh #Police #kidnap pic.twitter.com/L0pOAGfIgF
— Deepak Verma (@deepak_ver55507) August 27, 2024
- இந்த பெண் 150 ரூபாய்க்கு கிடைப்பாள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.
- வீடியோவில் அந்த நபர் இந்தியில் பேசியதால் வெளிநாட்டை சேர்ந்த பெண்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பெண்களை படம் பிடித்து அவர்களுக்கு என்ன விலை என்று ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், வெளிநாட்டை சேர்ந்த பெண்களை காட்டி இந்த பெண் 150 ரூபாய்க்கு கிடைப்பாள், அந்த பெண் 300 ரூபாய்க்கு கிடைப்பாள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.
அந்த நபர் இந்தியில் பேசியதால் அதனை புரிந்து கொள்ள முடியாத வெளிநாட்டு பெண்கள் அந்த வீடியோவில் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது என்றும், தன்னை ஒரு டூரிஸ்ட் கைடு என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டு பெண்களிடம் இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து ஹரித்வார் செல்லும் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து, ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதை அறிந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள்பேருந்தின் உள்ளே சிக்கியவகர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தில் அங்கிதா என்ற 19 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்துக்குள் சிக்கியிருந்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- முதலமைச்சர் கெலாட் நகரத்தில் மற்ற ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- உயர்மட்ட சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் நகரில் 2.8 கிமீ நீளமுள்ள உயர்மட்ட சாலையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக சோடாலா உயர்த்தப்பட்ட சாலை என்று அழைக்கப்பட்ட நிலையில், இந்த சாலைக்கு 'பாரத் ஜோடோ சேது' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காங்கிரஸின் தற்போதைய 'பாரத் ஜோடோ யாத்ரா' மத்தியில் இந்த மறுபெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை, அம்பேத்கர் வட்டம் அருகே உள்ள எல்ஐசி கட்டிடம் மற்றும் அஜ்மீர் சாலைக்கு இடையே உள்ள பாதையில் அமைந்துள்ளது. இந்த சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதலமைச்சர் கெலாட் நகரத்தில் மற்ற ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.