என் மலர்
நீங்கள் தேடியது "தண்டையார்பேட்டை"
- கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது.
- காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் காசி (வயது 55). லாரி டிரைவர். இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக திருவொற்றியூர் டோல்கேட்டில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை அவரது மகன் யோகராஜ் (22) அங்கிருந்து ஓட்டி வந்தார்.
தண்டையார்பேட்டை கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த யோகராஜ் காரை நிறுத்திவிட்டு உடனே வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென்று தீ பரவியது. அப்போது அதே பகுதியில் உள்ள விநாயகபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் (41) என்பவர் ஏற்கனவே அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து வீரப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயில் 2 கார்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யோகராஜ் புகை வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்ததால் தப்பினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
- கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ராயபுரம்:
பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. நோக்கி நேற்று முன்தினம் மாநகர பஸ் (எண்44) சென்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்நின்றபோது தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11-ம் மாணவர்கள் சிலர் ஏறி பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். இதனை கண்டக்டர் சிவசங்கரன் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது சாலையில் இருந்த பீர் பாட்டிலால் தாக்க முயன்றனர்.
பின்னர் பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார்கள் 6 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.